மதுரை திருமங்கலம் அருகே, கல் குவாரிகளின் உரிமைகளை ரத்து செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் ராணுவ வீரர்கள் வைத்த பேனர் அனைவரது கவனத்தை ஈர்த்தது.
திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிராமத்தில், மக்களின் எதிர்ப்பையும் மீறி செயல்பட்ட கல் குவாரிகள் எதிர்கால உரிமைகளை ரத்து செய்யவேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் பாஜக, அதிமுக, நாதக, தவெக ஆகிய கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து, மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்தும் விதமாக பேனர் வைத்தனர். அதில், “நாட்டைப் பாதுகாக்க தெரிந்த எங்களுக்கு, உள்ளூர் விஷக் கிருமிகளிடமிருந்து ஊரைப் பாதுகாக்க முடியவில்லையே” என வாசகம் எழுந்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.