நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு இந்தக் கூட்டத் தொடரில் சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, நெடுஞ்சாலை திருத்த சட்டம், குற்ற வழக்குகளில் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் போன்றோரின் பதவி நீக்கம் போன்ற முக்கிய மசோதாக்கள் அடங்குகின்றன.
இதனிடையே, எஸ்ஐஆர் சம்பந்தமான விவகாரங்கள் போன்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. குளிர்கால கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் முக்கிய சட்டங்கள் மற்றும் விவகாரங்கள் தொடர்பான விவாதங்களுக்காக மையமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.