மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதில் மாநில அரசின் தவறு காரணமாகும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “மெட்ரோ திட்ட அறிக்கையில் எத்தனை வீடுகளை இடித்து அகற்ற வேண்டும், எவ்வளவு மக்கள் பயனடைவார்கள் என்பதற்கான முழுமையான விவரங்கள் இல்லை. இதுபோன்ற அடிப்படை தகவல்கள் இல்லாததால் மத்திய அரசு அறிக்கையை திருப்பி அனுப்பியது,” என்றார்.
மேலும், மாநில அரசு அனுப்பிய திட்ட அறிக்கை விவரமற்றதாக இருந்ததால் மத்திய அரசை குறை கூற வாய்ப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.