அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, தற்போதைய சூழலில் மக்கள் பாதுகாப்புக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:
“திமுக ஆட்சியில் 4 முதல்வர்கள் உருவாகியிருக்கிறார்கள்; அதிகாரம் எவரிடமும் தெளிவாக இல்லை. இந்த நிலையில் மக்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும்?” என கேள்வி எழுப்பினார்.
போதைப் பொருட்களின் விற்பனை பெருகி, அதனால் ஏற்பட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“போதை அதிகமாகிவிட்டதால் மக்களுக்கு பாதுகாப்பே இல்லை. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் அன்றாடம் நடக்கிறது. இதைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட ஒழுக்கம் இந்த அரசில் இல்லை,” என்றார்.
மேலும், கொங்கு மண்டலத்தில் சோகமான சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்:
“முதியோர் வசிக்கும் தனிமையான இடங்களைத் தேர்வு செய்து கொலை செய்து, கொள்ளையடித்து தப்பிப் போகிறார்கள். இந்த நிலை தொடரக் கூடாது. அதனைத் தடுக்க அதிமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும்,” என்று பழனிசாமி வலியுறுத்தினார்.
அவரின் இந்த கருத்துகள் அதிமுக ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.