மக்கள் நலனைக் கருத்தில் கொள்ள திமுக அரசுக்கு நேரமில்லை; திமுக கொள்கையே கொள்ளையாக இருக்கிறது என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதில், காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 22 லட்சம் யூனிட் மணல் திருடப்பட்டு, ரூ.4,730 கோடி மதிப்பில் மணல் கொள்ளை நடந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
“எதற்காக விஜயை தொட்டோம், எதற்காக விஜயுடன் இருந்த மக்களை தொட்டோம் என்று மக்கள் வருத்தப்படுவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.
தவெகவினரை ‘தற்குறிகள்’ அல்ல, ‘ஆச்சரியக்குறிகள்’ எனப் பட்டியலிட்டார். மேலும், தற்குறிகள் ஒன்றாக சேர்ந்து திமுக அரசியலுக்கு கேள்வி குறியாக்கத்தைக் கொடுக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போதே திமுகவை “கூத்தாடி கட்சி” என விமர்சித்து வந்ததாகவும், 53 வருடமாக “கூத்தாடி” என்றே திமுக தொடர்ந்துவருகிறது என்றும் விஜய் கூறியுள்ளார்.