பாகிஸ்தான் தயாரித்த JF‑17C Block‑III போர் விமானங்களை அஜர்பைஜான் வாங்கியதற்கு பதிலடியாக, இந்தியா‑அர்மேனியா இடையேயான Su‑30MKI போர் விமான ஒப்பந்தம் வேகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நாகோர்னோ‑கராபாக் பகுதியில் அஜர்பைஜானிடம் அர்மேனியா சந்தித்த இழப்புகளுக்குப் பிறகு, தனது ராணுவ திறன்களில் ஏற்பட்ட சமநிலையின்மையை சரிசெய்ய அந்த நாடு தீவிரமாக ஆயுதக் கொள்முதல்களை முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அர்மேனியா இந்தியாவிடமிருந்து Su‑30MKI விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்திட முனைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2.5 முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை நிறைவடைந்தால், அது அர்மேனியாவின் வரலாற்றில் இதுவரை செய்த மிகப் பெரிய பாதுகாப்பு கொள்முதல் ஆகும். 2027ம் ஆண்டிலிருந்து விமானங்கள் வழங்கப்படலாம் என்றும், இந்தியாவின் ஹாலில் (HAL) நிறுவனமானது, அர்மேனியாவின் தேவைக்கு ஏற்றவாறு ஏற்றுமதி சிறப்பு வகை தயாரிக்கத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
அஜர்பைஜானின் JF‑17 விமானங்களை எதிர்கொள்ளும் வகையில், அர்மேனியாவுக்கு செல்லும் Su‑30MKI போர் விமானங்களில் அதிநவீன மேம்பாடுகள் சேர்க்கப்படுகின்றன.
அவை:
- இந்தியாவில் உருவாக்கப்பட்ட உத்தம் AESA ரேடார்
- நீண்ட தூரத் தாக்குதலில் திறம்படும் அஸ்திரா BVR ஏவுகணைகள்
- மேம்பட்ட எலெக்ட்ரானிக் வார்ஃபேர் (EW) அமைப்புகள்
இந்த ஒப்பந்தம் மிக விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.