“இதற்கு முதல்வர் எப்படி நியாயம் சொல்வார்?” – கடுமையான கண்டனம்
அரசு மாணவர் விடுதியில் ஒரு சிறுவன் நிர்வாண நிலையில் காணப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்குத் தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வேளையில், திமுக அரசு பள்ளி கல்வி மற்றும் விடுதி நிர்வாகத்தில் முழு அலட்சியம் காட்டி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
தனது அறிக்கையில் தொடர்ந்து அவர் கூறியதாவது:
“பொதுவெளியில் நடந்து செல்வதை Reels போடுவதில் இருக்கும் ஆர்வத்தையே, மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பித்தலும், கல்வி சூழலை சீர்படுத்தலும், அரசு மாணவர் விடுதிகளை பாதுகாப்பாக பராமரித்தலும் காட்ட வேண்டும்.
அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவது, மாணவர் விடுதிகளில் ஆசிரியர்களை நியமித்து கண்காணிப்பை வலுப்படுத்துவது போன்ற பொறுப்புகளைச் செய்யாமல் தம்மை விளம்பரப்படுத்துவதிலேயே தீவிரம் காட்டுவது ஸ்டாலின் மாடல் அரசு என்பதில் வருத்தம்.”
மாணவர் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலைமைக்கு உடனடியாக அரசு பொறுப்பு ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.