திருச்சியில் நடைபெற்ற S.I.R படிவம் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் பாஜக உயர்நிலை தலைவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கான தகவல் பரப்பல் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கினர்.
திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், S.I.R படிவம் குறித்த விவரங்கள் மற்றும் அதை மக்களிடம் எவ்வாறு எளிமையாக விளக்கி சொல்லலாம் என்பதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. இந்தப் படிவம் தொடர்பான தெளிவான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதில் பாஜக நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று தலைவர்கள் அறிவுறுத்தினர்.
மேலும், வரும் சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு, கட்சி சார்பான தேர்தல் பணிகளை வேகமாகவும் திட்டமிட்ட முறையிலும் மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கட்சித் திட்டங்கள் மற்றும் தளவாட பணிகள் குறித்து கூடுதல் ஆலோசனைகளும் தலைவர்களால் வழங்கப்பட்டன.