கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் செல்வப்பெருந்தகை மீது கிண்டலாகவும், கடுமையாகவும் விமர்சனம் முன்வைத்தார்.
“10 ரூபாய் பாலாஜி” — மக்கள் வைத்த பெயர்!
தனது உரையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து இபிஎஸ் கூறினார்:
“இங்குள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மக்கள் ‘10 ரூபாய் பாலாஜி’ என்று பெயர் வைத்துள்ளார்கள். மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை மீண்டும் மக்களுக்கே கொடுத்து வாக்கு வாங்கப் பார்க்கிறார்.”
அவர் மேலும், செந்தில் பாலாஜி மீண்டும் பதவி, அதிகாரம் பெற மோசடி திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
“கட்சிகள் மாறினாலே பதவி… செல்வப்பெருந்தகை உயிருடன் எடுத்துக்காட்டு!”
ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்து திமுகவிற்கு வந்துள்ள அமைச்சர் செல்வப்பெருந்தகையை சுட்டிக்காட்டி இபிஎஸ் விமர்சித்தார்:
“5 கட்சியை மாறினால்தான் இந்த அரசில் பெரிய பதவி கிடைக்கும் போல. அதற்கு உயிருடன் இருக்கும் எடுத்துக்காட்டு — செல்வப்பெருந்தகை!”
“மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கொள்ளையடிப்போம் என்ற திட்டம்!” – இபிஎஸ் குற்றச்சாட்டு
இபிஎஸ் மேலும் கடுமையாக கூறினார்:
“மக்களிடமிருந்து ஏமாற்றிய பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்கி, மீண்டும் ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்போம் என்பதே இவர்களின் நோக்கம்.
அவர்களின் திட்டத்துக்கு யாரும் விலைக்குப் போகாதீர்கள்.”
திமுக – அதிமுக மோதல் மேலும் தீவிரம்
இந்த உரை, செந்தில் பாலாஜி உள்பட திமுக அமைச்சர்கள் மீது இபிஎஸ் கடுமையாக தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில் நிலவி வரும் SIR பிரச்சனையில் இரு கட்சிகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டி வரும் சூழலில், இபிஎசின் இந்து விமர்சனம் மேலும் அரசியல் சூடு ஏற்றியுள்ளது.