சிவகாசியில் ரீல்ஸ் வீடியோ படமாக்கிக் கொண்டிருந்த சில இளைஞர்களின் செயலால், அந்த வழியாக சென்ற ஒருவர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையின் நடுவில் இரு இளைஞர்கள் வாக்குவாதம் நடத்துவது போல நடித்து ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், அவர்கள் செயலை கவனித்து கொண்டபடியே தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், முன்னால் சென்றிருந்த பேருந்தை கவனிக்காமல், அவரது இருசக்கர வாகனம் நேரடியாக பின்புறம் மோதியதால் விபத்து ஏற்பட்டது.
சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.