அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக உள்ளன என்றும், ஆளுங்கட்சியினர் மக்களின் பிரச்சனைகளை புறக்கணித்து வருகின்றனர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பொதுமக்கள் உயிர் அச்சத்துடன் இருக்கும்போதும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உல்லாச சுற்றுப்பயணங்களில் ஈடுபடுவது பொருத்தமற்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஆளுங்கட்சியின் முதல்வர் கூட்டம் எங்கே நடந்தாலும், அங்கு மக்கள் இல்லாத இடத்திலும் கூட அதிகப்படியான காவல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கும் இடங்களில் போதுமான பாதுகாப்பு இல்லை.
மக்கள் கேட்கும் இந்தக் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்,”
என்று இபிஎஸ் குற்றஞ்சாட்டினார்.
மக்களின் உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கொள்ளாமல், அரசின் உயர்பதவியாளர்கள் சொந்த நிகழ்ச்சிகள் மற்றும் பயணங்களில் கவனம் செலுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் அவர் தெரிவித்தார்.