கோட்டக் மஹிந்திரா நிறுவனம் தங்கம்–வெள்ளி பரஸ்பர நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது
கோட்டக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம் தனது புதிய கோட்டக் தங்கம்–வெள்ளி பாசிவ் பண்ட் ஆஃப் பண்ட் (FoF) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஓப்பன்-எண்டட் (Open-ended) பரஸ்பர நிதி திட்டம், கோட்டக் கோல்ட் ETF மற்றும் கோட்டக் சில்வர் ETF திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு மதிப்புமிக்க உலோகங்களில் ஒரே நேரத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
நீண்டகால மூலதன வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டத்தின் பொது சந்தா (NFO) கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கியதுடன், அக்டோபர் 20 ஆம் தேதி (இன்றுடன்) நிறைவடைகிறது.