வைகோ பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மது, போதைப்பொருள் பயன்பாடு காரணமாக மாணவ–மாணவிகள், பெண்கள் உட்பட பலர் பாதிக்கப்படுகின்றனர். மேலும், கல்வி நிறுவனங்களுக்குள் சாதி சார்ந்த குழுக்கள் உருவாவதால் மாணவர்கள் இடையே பதட்டம், மோதல்கள் உருவாகி வருவதை கவனிக்கலாம். இதைத் தடுக்க ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் முன்வர வேண்டும்; மாணவர்களிடம் நட்பு, சமூகப் பாராட்டை வளர்க்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். மது மற்றும் போதைப்பொருளை கட்டுப்படுத்த அரசு மற்றும் காவல்துறை தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
மது–போதை எதிர்ப்பு, சாதி சங்கங்களுக்கு தடை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். அந்த நடைபயணத்தின் போது, திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக ஆட்சி தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தப் போகிறேன்.
இந்த நடைபயணத்தை திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார்; மதுரையில் நடைபெறும் நிறைவு விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்பார்.
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.