பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து தங்களை நீக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக, மனிதநேய மக்கள் கட்சி நீதிமன்றத்தை நாடியுள்ளது. அதன் மனுவிற்கு பதில் தரும்படி சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக எந்தத் தேர்தலிலும் கலந்து கொள்ளாததால், நாடு முழுவதும் உள்ள 474 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையம் செப்டம்பர் 19ஆம் தேதி அறிவித்தது. மனிதநேய மக்கள் கட்சியும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.