தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது முனைவர் பட்ட ஆய்வை முடித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய்மொழி தேர்வில் வெற்றிப் பெற்றார். இதையடுத்து, புறத் தேர்வாளராக இருந்த பேராசிரியர் அவரை முனைவர் பட்டதாரியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தேசியக் கல்லூரி உடற்கல்வி துறையில் முனைவர் பட்டத்திற்கான தனது ஆராய்ச்சி பதிவை அமைச்சர் அன்பில் மகேஸ் 2021 அக்டோபர் மாதத்தில் மேற்கொண்டு, அதற்கான முன்மொழிவையும் அதே நேரத்தில் சமர்ப்பித்திருந்தார்.