பிஹார் தேர்தல் முடிவுக்குப் பிறகு பல அனுபவங்கள் கிடைத்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தாலும், “காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தால் அவர்கள் உங்களையும் அடித்து இழுத்து கீழே தள்ளிவிடுவார்கள் என்பதையும் ஒரு கூடுதல் பாடமாக எடுத்துக்கொள்ளலாம்” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சென்னையில் பத்திரிகையாளர்களுடன் பேசிய அவர்,
“காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ‘எங்கள் வாக்குகள் திருடப்பட்டன’ என்று உரக்கக் கூறி வந்தார். ஆனால் பிஹார் மக்கள் தாங்களே முடிவைச் சொல்லிவிட்டார்கள் — ‘எங்கள் ஓட்டுகள் எங்கள் கைகளில்தான் இருந்தது; உண்மைக்கு புறம்பாகப் பேசுகிறவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது நாங்களே’ என்று வாக்குப்பெட்டியில் அவர்களை தட்டி அனுப்பி வைத்துவிட்டார்கள்” எனக் கடுமையாக விமர்சித்தார்.