எழும்பூரில் அமைந்துள்ள ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்படும் முக்கியமான வரலாற்று ஆவணங்களின் ஆதாரத்தை கொண்டு, தமிழ்நாட்டின் வரலாற்றை ஆராய்வோருக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் தமிழகத்தின் பழமையான ஆவணக் காப்பகத்தில், 1633ஆம் ஆண்டு தொடங்கி வெளிவந்த நூல்கள் மற்றும் 1670ஆம் ஆண்டைச் சேர்ந்த பண்டைய ஆவணங்கள் பாதுகாப்புடன் சேமிக்கப்பட்டுள்ளன.