“வரவிருக்கும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மக்கள் துரத்தும் அளவுக்கு எதிர்க்க வேண்டும். அவரை தோல்வியுறச் செய்வது தூத்துக்குடி மாவட்ட வாக்காளர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும்,” என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
நேற்று கோவில்பட்டியில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது தெரிவித்ததாவது:
“முந்தைய ஆட்சிக் காலத்தில் இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்கள் அதிகம் உள்ளனர் என்று கனிமொழி எம்.பி. கூறியிருந்தார். ஆனால், இன்று அதைப்பற்றி ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. காரணம், டாஸ்மாக் வழியாக அரசுக்கு ரூ.50,000 கோடி வருமானம் கிடைக்கிறது. மதுக்கடைகளை குறைப்போம் என சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், ஒரே ஒரு கடையையாவது மூடாமல், மாறாக கடைகளின் எண்ணிக்கையைமேலேற்றி வருகின்றனர்,” என்றார்.