மதுரை மீனாட்சியம்மன் ஆலய சொத்துகள் குறித்துப் அறநிலையத் துறை மற்றும் வருவாய்த் துறை தாக்கல் செய்த பட்டியல்கள் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் இருப்பதை கவனித்த உயர்நீதிமன்றம், இரு துறைகளும் சமர்ப்பித்த ஆவணங்களை ஒப்பிட்டு, உண்மையான சொத்துப் பதிவுகளை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் அதனுடன் இணைந்த உபகோயில்களும் கொண்ட சொத்துகளை மீட்டெடுத்து சரியாக பராமரிக்க வேண்டும். மேலும் கோயிலில் நடைபெறும் புனரமைப்பு பணிகள் விரைவாக முடிவுற்று, குடமுழுக்கு சீக்கிரம் நடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையுடன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தொடர்ந்திருந்தார்.