சபரிமலைக்கு பயணம் செய்யும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக அறநிலையத் துறை சார்பில் இருபத்திநான்கு மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் மண்டல பூஜை நவம்பர் 17 (நேற்று) முதல் டிசம்பர் 27 வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மகரவிளக்கு பூஜை டிசம்பர் 30 முதல் 2026 ஜனவரி 19 வரை நடைபெறும்.
இந்த பூஜை காலங்களில் தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்கள் சிரமமின்றி பயணம் செய்ய, இடையறாது செயல்படும் தகவல் மற்றும் உதவி மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.