‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது நேரத்துக்கு வெளியாவதா என்ற சந்தேகம் திரைத்துறையில் உருவாகியுள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில், நடிகர் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படம் பல மாதங்களாக தயாரிப்பில் இருந்து வந்தது. வெளியீட்டு தேதி உறுதியாக அறிவிக்கப்பட்டாலும், இறுதி கட்டமாக உள்ள சுமார் 8 நாட்கள் படப்பிடிப்பு இப்போது தான் தொடங்கி நடந்து வருகிறது.