வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றுள்ள நிலையில், நேற்று சென்னையில் பரவலான மழை பதிவானது. தமிழகத்தில் பருவமழை தற்போது தீவிரம் அடைந்திருக்கிறது. இதை மேலும் அதிகரிக்கும் வகையில், தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கை கரைக்கு அருகே ஒரு தாழ் காற்றழுத்தம் உருவாகி உள்ளது.
இந்த அமைப்பு மெதுவாக மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி வருவதால், மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் மழை தொடர்ச்சியாக பொழிகிறது.
சென்னையைச் சுற்றிய பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாமல் மிதமான மழை பெய்தது. பல இடங்களில் நன்கு பெய்ததால், பள்ளிக்கு செல்லும் மாணவ–மாணவிகள் சிரமத்தை சந்தித்தனர்.