பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 19) கோவைக்கு வருகிறார். அவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் வரவேற்கிறார்.
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இயற்கை விவசாயிகள் மாநாடு, கோவை கொடிசியா தொழில்துறை வளாகத்தில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கவிருக்கிறார்.
இதற்காக பிரதமர், இன்று மதியம் 1.25 மணிக்கு புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். கோவை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர். என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் பிரதமருக்கு வரவேற்பளிக்க உள்ளனர்.