ரஜினியை தனுஷ் இயக்குவாரா? – வெளியான புதிய தகவல்

Date:

ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை தனுஷ் இயக்குவாரென சில தகவல்கள் பரவி வந்தன.

‘ஜெயிலர் 2’ பிறகு ரஜினியின் அடுத்த படம் சுந்தர்.சி இயக்கவும், கமல் ஹாசன் தயாரிக்கவும் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே சுந்தர்.சி அந்த இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்தது, திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் ரஜினியின் 173-வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள்? என்பது பெரிய கேள்வியாக மாறியுள்ளது. பல இயக்குநர்கள் கதைகளை ரஜினிக்கு கூறி வருவதாகவும் தகவல். இதில் தனுஷும் ஒரு கதை சொன்னதாகவும், அது ரஜினிக்கு பிடித்ததாகவும் செய்திகள் வந்தன.

ஆனால் இதுகுறித்து விசாரித்த போது,

இது வெறும் வதந்தி மட்டுமே. இப்படியான எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை” என தெளிவுபடுத்தப்பட்டது.

தற்போது தனுஷ் விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் பிறகு மாரி செல்வராஜ் மற்றும் ஹெச்.வினோத் இயக்கும் திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதனால், அவர் இயக்கும் அடுத்த படம் உருவாக இன்னும் காலம் எடுக்கும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“பாஜகவுக்கு ஆதரவாகவே அதிமுக எஸ்ஐஆரை ஆதரித்தது” — என்.ஆர். இளங்கோ எம்.பி

பாஜகவுக்கு துணை நிற்கும் நோக்கத்தில்தான் அதிமுக எஸ்ஐஆரை ஆதரித்தது எனவும், திமுக...

பச்சிளம் குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுக்காதீர்கள் – ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் கணேஷ் எச்சரிக்கை

பச்சிளம் குழந்தைகளின் குரல் நல்லதாக வரும் என்ற நம்பிக்கையில் கழுதைப் பால்...

சபரிமலையில் மண்டல வழிபாடு தொடக்கம் – பக்தர்கள் பெரும்கூட்டம் காரணமாக பல இடங்களில் நெரிசல்

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டலகால வழிபாடு நேற்று மிகுந்த செழுமையுடன் ஆரம்பமானது....

மீனாட்சியம்மன் கோயில் பிரசாத விலை உயர்வு – திரும்பப் பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் விற்கப்படும் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக...