தமிழ் சினிமாவில் ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தின் நாயகியாக அறிமுகமான மீரா வாசுதேவன், பின்னர் ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதேசமயம் பல தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
மலையாளத் திரைப்படங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வரும் அவர், 2005ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலுடன் திருமணம் செய்து கொண்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து, 2010ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
பின்னர் 2012ஆம் ஆண்டு நடிகர் ஜான் கொக்கேனுடன் மீரா திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு அரிஹா ஜான் என்ற மகன் உள்ளார். ஆனால் 2016ஆம் ஆண்டில் இவர்களும் பிரிந்து சென்றனர். அதன் பின்னர் அவர் ஒளிப்பதிவாளர் விபினை திருமணம் செய்தார்.
சமீபத்தில், விபினிடமிருந்தும் பிரிவு ஏற்பட்டிருப்பதை மீரா வாசுதேவன் அறிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
“2025 ஆகஸ்ட் முதல் நான் தனியாக வாழ்ந்து வருகிறேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன். இது எனது வாழ்க்கையின் மிக அமைதியானவும் அழகானவும் இருக்கும் கட்டமாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.