கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகர்கள் நடித்த ‘மாஸ்க்’ படத்தை இயக்குநர் விகர்ணன் அசோக் நவம்பர் 21-ம் தேதி வெளியிட இருக்கிறார். இதற்கிடையே, அதே தலைப்பில் படத்தை உருவாக்கி வரும் புதுகை மாரிஸா தன்னுடைய உரிமையை முன் வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மாரிஸா கூறியது:
“2017-ல் இந்த தலைப்பை தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்தேன். அப்பொழுது தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து வந்தேன். பிளாக் பாண்டி, சென்ட்ராயன், வடிவுக்கரசி, ஷகீலா ஆகியோர் நடித்த ‘மாஸ்க்’ படத்தை ஹாரர் காமெடியாக உருவாக்கி விட்டேன்.
விகர்ணன் அசோக் தயாரிப்பில் ‘மாஸ்க்’ படம் உருவாகும் தகவல் வந்ததும், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கத்திடம் முறையிட்டேன். அவர், ‘டைட்டில் உங்களுடையது, யாருக்கும் எந்நோசி இல்லை’ என்று உறுதி அளித்தார். தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட போஸ்டர் வந்த பின்னர் கேட்டபோது எந்த பதிலும் இல்லை.”
மாரிஸா மேலும் தெரிவித்தார்,
“இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம், பெப்சி, இயக்குநர்கள் சங்கம் மூன்றிலும் முறையிட்டும் பதில் கிடைக்கவில்லை. எனது படம் முழுமையாக முடிந்து சென்சாருக்கு தயாராகிவிட்ட நிலையில் நியாயம் வழங்கப்பட வேண்டும்.”