காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது, கடந்த வாரம் டெல்லி செங்கோட்டை பகுதியில் காரில் வெடிப்பொருட்களுடன் சென்று தாக்குதல் நடத்தினார். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்டவர் மருத்துவர் ஷாகின் சயீத். விசாரணையில், அவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவராக இந்தியாவில் செயல்பட்டவர் என்று தெரியவந்தது.
செல்போன் ஆய்வு:
அவரது செல்போனில், வாட்ஸ்அப் மெசேஜ்கள் அழிக்கப்பட்டிருந்தன, பின்னர் மீட்டெடுக்கப்பட்டது. இதில் அவர் “மேடம் எக்ஸ்” மற்றும் “மேடம் இசட்” என்ற இரண்டு பெண்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. குறியீட்டு சொற்கள் மூலம் தீவிரவாத தகவல்களை பரிமாறியிருப்பது தெரிய வந்தது. ஷாகினை அவர்கள் “மேடம் சர்ஜன்” என்று அழைத்தனர்.
மேடம் எக்ஸ் மற்றும் மேடம் இசட் அனுப்பிய செய்திகளில், ‘மெடிசின்’ என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டது. விசாரணை அதிகாரிகள் இதை வெடிமருந்தை குறிக்கும் குறியீட்டு சொல் எனக் கண்டுபிடித்தனர்.
மேடம் எக்ஸ் அனுப்பிய செய்தியில்,
“ஆபரேஷனுக்கு மருந்து பற்றாக்குறை இருக்கக்கூடாது”
என்று குறிப்பிட்டார். இங்கு ஆபரேஷன் என்பது தாக்குதலுக்கான குறியீட்டு சொல் என்று சந்தேகம் உள்ளது.
மேடம் இசட் அனுப்பிய மற்றொரு செய்தியில்,
“மேடம் சர்ஜன், ஆபரேஷன் ஹாம்டார்டில் அதிக கவனம் செலுத்துங்கள்”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரர்கள் தெரிவிப்பதாவது, ஆபரேஷன் ஹாம்டார்ட் என்பது அவர்களது இயக்கத்துக்குள் பெண் தீவிரவாதிகளை சேர்ப்பதை குறிக்கிறது.