ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை அமைப்பாளர் அனிருத். இந்த படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் இந்தி நடிகை அபேக்ஷா போர்வல் இணைந்துள்ளார். அவர் இந்தியில் பிரபலமான வெப் தொடர்களான ‘உண்டேகி’ (Undekhi), ‘ஹனிமூன் போட்டோகிராஃபர்’, ‘ஸ்லேவ் மார்க்கெட்’ ஆகியவற்றில் நடித்துள்ளார். அபேக்ஷா நடிக்கும் காட்சிகள் மும்பையில் படமாக்கப்படுகின்றன.