தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் சோமசுந்தரம் பொதுமக்களுக்கு வலியுறுத்திய அறிவுறுத்தலில் தெரிவித்ததாவது:
தடாகம், ஏரி, குளம் போன்ற இடங்களில் தேங்கியிருக்கும் அல்லது சுத்தமற்ற, மாசடைந்த நீரில் குழந்தைகளோ பெரியவர்களோ குளிக்கவே கூடாது. அனைத்து நீர்நிலைகளும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கப்படுவதை உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாகக் கவனிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நீச்சல் குளங்களும் விதிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப சுத்தம் செய்யப்பட வேண்டும்.
பயன்படுத்தப்படும் நீரில் தேவையான அளவு குளோரின் கலந்திருப்பது கட்டாயம். மூளையழற்சி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவ நிலையங்களுக்கு வருபவர்கள் மிகுந்த கவனிப்புடன் கண்காணிக்கப்பட வேண்டும். மேம்பட்ட சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அதற்கான வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு தாமதமின்றி மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.