தமிழில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. பல திரைப்பட பிரபலங்களும் இப்படத்தை பாராட்டியிருந்தனர். இந்த படத்தின் மூலம் தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமானார்.
இந்த வெற்றிப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் ஆர்வம் ஷாரூக் கானிடம் இருந்து வந்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றி துவங்கியுள்ளது. முன்னணி இயக்குநர் ஐ.வி. சசியின் மகன் அனி ஐ.வி. சசி இப்படத்தை இயக்குகிறார்.
இந்த ரீமேக்கில் —
- ராஜசேகர் – தினேஷ் கதாபாத்திரத்தில்
- ரம்யா கிருஷ்ணன் – ஸ்வாசிகா கதாபாத்திரத்தில்
- ஷிவாத்மிகா ராஜசேகர் – சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்தில்
நடித்து வருகின்றனர். ஹரிஷ் கல்யாண் நடித்த கதாபாத்திரத்திற்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.