தமிழகத்திற்கு வரவிருந்த ரூ.1,720 கோடி முதலீடு ஆந்திராவுக்கு மாறியுள்ளதைக் கண்டித்து, தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் அரசு மீது கடும் விமர்சனம் செய்துள்ளார்.
தென்கொரிய நிறுவனமான ஹ்வாசங், தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது அது ஆந்திராவைத் தேர்வு செய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய சுமார் 20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இழந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியதாவது:
ஒவ்வொரு முறையும் முதலீடு வருகிறது என்று அரசு விளம்பரப்படுத்தி, பின்னர் அந்த முதலீடு அண்டை மாநிலத்துக்குச் செல்லும் நிலை தொடர்கதையாகிவிட்டதாகவும், வெளிநாடு பயணம் செய்தும் முதலீட்டை ஈர்க்க முடியாதது அரசின் தோல்வி என்பதையும் அவர் சாடியுள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என்று கூறும் முதல்வரின் செயல்திறனற்ற ஆட்சி காரணமாகவே இந்த இழப்புகள் ஏற்படுகின்றன” என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.