கோவையில் நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். இதையொட்டி கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலைய நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பாதுகாப்பு காரணங்களால் சில தற்காலிக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வாகன நிறுத்தத்துக்கு தடை
- நவம்பர் 18 காலை 6 மணி முதல் நவம்பர் 19 மாலை 6 மணி வரை
கோவை விமான நிலைய நுழைவாயில் முன்பு வாகனங்கள் நிறுத்தம் முற்றிலும் தடை.
- பயணிகளை இறக்கி/ஏற்றிச் செல்ல 3 நிமிட அனுமதி வழக்கம்போல தொடரும்.
பயணிகள் இக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கோவை விமான நிலைய இயக்குநர் (பொறுப்பு) சம்பத் குமார் தெரிவித்ததாவது:
- பிரதமர் வருகையை முன்னிட்டு தீவிரமான பாதுகாப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
- பயணிகள் மட்டுமின்றி விமான நிலைய ஊழியர்களும், விமான நிறுவன பணியாளர்களும் கடுமையான சோதனைகளுக்குட்படுத்தப்படுகின்றனர்.
- சிலருக்கு 2 அல்லது 3 முறை கூடுதல் சோதனைகள் நடைபெறுகின்றன.
- மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) அதிகரிக்கப்பட்ட கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.