சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் திமுக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடுகள் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, அதிமுக நாளை (நவம்பர் 17) நடத்தத் திட்டமிட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக வெளியிட்ட அறிக்கையில்,
ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நவம்பர் 17 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம், சென்னை வானிலை மையம் அறிவித்த கனமழை முன்னறிவிப்பை காரணமாகக் கொண்டு மாற்றப்பட்டுள்ளதாகவும், அது நவம்பர் 20 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அதே இடத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம், “திமுக – ஸ்டாலின் மாடல் அரசு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் நடத்தியதாக கூறப்படும் முறைகேடுகளை கண்டிக்கும் வகையில்” நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.