ஜப்பானின் குமாமோட்டோ நகரில் நடைபெற்று வரும் ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் லக்ஷயா சென் அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் கால் இறுதிப்போட்டியில், உலக தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள முன்னாள் உலக சாம்பியன் லோ கீன் யூ (சிங்கப்பூர்)வை, லக்ஷயா சென் 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
இந்த வெற்றியுடன் அவர் உற்சாகமான முன்னேற்றத்தைப் பதிவு செய்து, அரைஇறுதிக்குள் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்தினார்.