நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மாநில அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மற்றும் வழக்கறிஞர் மிஷா ரோஹ்தகி தாக்கல் செய்த மனுவில், குடியரசுத் தலைவரின் இந்த முடிவு சட்டத்துக்கு விரோதமானது என்று கூறப்பட்டுள்ளது.
அந்த முடிவை ரத்து செய்து, நீட் விலக்கு மசோதா ஒப்புதல் பெற்றதாக அறிவிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மசோதாவை மீண்டும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்ப உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளது.