நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு பாதுகாவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 10 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் நேற்று நடந்த விசாரணைக்கு, வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த வாளையாறு மனோஜ், ஜித்தின் ஜாய் ஆகியோர் ஆஜரானனர்.
இந்த நிலையில், அரசுத் தரப்பு விசாரணைக்காக கூடுதல் கால அவகாசம் கோரியதால், நீதிபதி முரளிதரன் வழக்கை டிசம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.