தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாவது, தென்னையில் இருந்து ‘நீரா பானம்’ இறக்கி விற்பனை செய்யும் வாக்குறுதியை திமுக காற்றில் பறக்கவிட்டுள்ளது.
அவர் சமூக வலைதளத்தில் கூறியதாவது: “தென்னை விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறை, வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் போன்ற பிரச்சினைகளால் எதிர்காலம் மோசமாகும் நிலையில், திமுக அரசு தென்னை விவசாயத்தை காக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிப்பதற்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லை.”
மேலும், 2021 தேர்தல் காலத்தில், தென்னை விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தென்னையில் இருந்து ‘நீரா பானம்’ விற்பனை செய்ய ஊக்குவிப்பதாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால் அந்த வாக்குறுதிகள் பூர்த்தி செய்யப்படாமல், நீரா பானம் போன்ற மதிப்புள்ள பொருட்கள் மற்றும் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாததால், தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், விரைவில் திமுக அரசுக்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.