டெல்லியில் 10ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள், ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தவர்கள் என்பதும் உறுதியான நிலையில், தேசிய புலனாய்வு முகமை (NIA) அந்தக் கல்லூரியை விசாரணை வளையில் கொண்டு வந்துள்ளது. அதிகாரிகள் நேரில் சென்று மருத்துவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) அல் பலா பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
- அல் பலா பல்கலைக்கழகம் என்ஏஏசி அங்கீகாரம் பெற்றதல்ல.
- அங்கீகாரம் பெற எந்தவித விண்ணப்பமும் பல்கலைக்கழகம் தாக்கல் செய்யவில்லை.
- இருந்தும், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் “அல் பலா அறக்கட்டளையின் அங்கம்” என்று தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகம் கீழ்க்கண்ட மூன்று கல்லூரிகளை இயக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது:
- அல் பலா ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் (1997 முதல்)
- பிரவுன் ஹில் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி (2008 முதல்)
- அல் பலா ஸ்கூல் ஆஃப் எஜுகேஷன் அண்டு டிரெய்னிங் (2006 முதல்)
இந்த விவரங்களுக்கு பல்கலைக்கழகம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம் (AIU) நேற்று அல் பலா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.