ரூ.14,599 கோடி வீட்டு மோசடி: ஜேபி இன்ஃபராடெக் நிறுவனர் மனோஜ் கவுர் — நொய்டாவில் அமலாக்கத்துறையால் கைது

Date:

ஜேபி இன்ஃபராடெக் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான மனோஜ் கவுர், பெரும் அளவிலான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் (ED) கைது செய்யப்பட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், நொய்டா–ஆக்ரா ஆறு வழிச் சாலையின் 165 கிலோமீட்டர் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களை உருவாக்கும் இந்நிறுவனம் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

ஜேபி விஷ்டவுன் மற்றும் ஜேபி கிரீன்ஸ் என்ற வீட்டு திட்டங்களில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கான வீடுவாங்குபவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை தொடங்கியது. கட்டப்படாத வீடுகள், தாமதம் மற்றும் பணம் திசைதிருப்பப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன.

அதே வழக்கில் அமலாக்கத் துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக மனோஜ் கவுர் கைது செய்யப்பட்டார்.

ED வெளியிட்ட அறிக்கையில்,

  • ஜேபி இன்ஃபராடெக் வெளியிட்ட விளம்பரங்களை நம்பி ஆயிரக்கணக்கானோர் வீடுகளுக்காக முதலீடு செய்தனர்.
  • ஆனால் அந்தப் பணம் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படாமல் வேறு நோக்கங்களில் திசை திருப்பப்பட்டது.
  • வீடுகள் முடிக்கப்படாததால் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டனர்.
  • மொத்த மோசடி தொகை ரூ.14,599 கோடியாகும்,

    என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“பிஹார் சதி தமிழகம் தாக்காது; வாக்காளர்கள் விழிப்புணர்வு அதிகம்” – அமைச்சர் கோவி.செழியன்

தமிழகத்தில் பிஹாரில் போலிய சதிச் செயல் நடைபெறாது என்று உயர் கல்வித்துறை...

32 பந்துகளில் சதம்! வைபவ் சூர்யவன்ஷி இந்தியா-ஏ அணியின் அபார வெற்றி

கத்தாரில் நடைபெறும் ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டார்ஸ் டி20 தொடரில் இந்தியா-ஏ...

“பகுத்தறிவால் தான் தமிழகம் சிறந்து விளங்குகிறது” – துணை முதல்வர் உதயநிதி

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா...

சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் நாயகியாக ஸ்ரீலீலா

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். இருவரும் சமீபத்தில்...