ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நேரம் நோயாளிகளின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மருக்கு புதுச்சேரி மட்டுமல்ல, தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து நோயாளிகள் வரும் நிலையில், பொது மருத்துவப் பிரிவிலும் ஜிப்மர் ரத்த வங்கியிலும் செயல்படும் ரத்த பரிசோதனை மையங்களின் நேரங்கள் மாற்றப்பட்டு, இனி கீழ்காணும் வகையில் செயல்படும்:
- திங்கள் முதல் வெள்ளி: காலை 6:30 மணி – மாலை 5:00 மணி
- சனிக்கிழமை: காலை 6:30 மணி – மதியம் 2:00 மணி
ஜிப்மர் நிர்வாகம் கூறியதாவது, இந்த நேர நீட்டிப்பால்:
- அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யும் வசதி ஏற்படும்,
- காத்திருப்பு நேரம் குறையும்,
- பரிசோதனை முடிவுகளை விரைவில் பெற முடியும்,
- பின்னர் மருத்துவ ஆலோசனைகளை உடனடியாக பெற முடியும்.
மேலும், காலை 6:30 மணிக்கு பரிசோதனை செய்வதால், வேர் நோயாளிகள் (fasting), மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் நீண்ட நேரம் உணவு அருந்த முடியாத நோயாளிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும்.
இதன் மூலம் மருத்துவமனையில் சீரான சேவையை உறுதி செய்வதோடு, நோய் கண்டறிதல் சேவைகள் மேம்பட்டு, நோயாளிகளின் திருப்திகரமான மனநிலையை உறுதி செய்வதற்கும் வழிவகுக்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.