சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்தது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. கடந்த 8-ம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.93,600 ஆக இருந்தது.
ஆனால், நேற்று (செவ்வாய்) திடீரென பவுனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.92,800 ஆக விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.11,600 ஆகவும், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.11,232 ஆகவும் விற்கப்பட்டது.
இதே நேரத்தில், வெள்ளி விலை உயர்வடைந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.173 ஆகவும், கிலோ கட்டி வெள்ளி ரூ.3,000 உயர்ந்து ரூ.1,73,000 ஆகவும் விற்பனையாகியது.