அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
நடிகர் அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ என பெயரிடப்பட்டுள்ளது.
‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மம்தா மோகன்தாஸ் அருள்நிதியின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருவரும் நடித்துள்ள ப்ரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், மீனாட்சி கோவிந்தராஜன் அருள்நிதிக்கு இணையாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது; தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்திற்கு ஒளிப்பதிவை வெற்றிவேல், இசையை நிவாஸ் கே. பிரசன்னா, எடிட்டிங் பணியை வெங்கட் ராஜன் மேற்கொண்டுள்ளனர். காமெடி மற்றும் உணர்ச்சி கலந்த கதையம்சத்தில் உருவாகியுள்ள ‘மை டியர் சிஸ்டர்’ படம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.