தஞ்சையில் ஓர் அடி உயரமான ஐம்பொன் மீனாட்சியம்மன் சிலை கண்டெடுப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், பாந்தக்குளத்தைச் சேர்ந்த சரண்யா, தனது வீட்டில் கழிவு நீர் தொட்டி அமைக்கச் செய்யும் பணிக்காக பள்ளம் பறித்தபோது, 6 அடி ஆழத்தில் சிலை கண்டறியப்பட்டார்.
தொழிலாளர்கள் குழியை நீட்டி சிலையை எடுத்த போது, அது ஐம்பொன்னாலான சுமார் ஓர் அடி உயரமுள்ள, தோளில் கிளி அமர்ந்துள்ள 6 கிலோ எடையிலான மீனாட்சியம்மன் சிலை என தெரியவந்தது. சரண்யா உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தார்.
சிலையை பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன் கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். இதைத் தெரிந்த திமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டார்.
மீட்கப்பட்ட சிலை பழமையானது என்றும், இதற்குப் பின்பு மேலதிகாரிகளின் உத்தரவின் படி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டாட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.