எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் வெள்ளிப் பதக்கம் வென்று சிறப்பித்துள்ளார்.
ஆண்கள் பிரிவில் நடைபெற்ற 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் இறுதிப் போட்டியில், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 466.9 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
சீனாவின் யுஹுன் லியு 467.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். பிரான்சின் ரோமெய்ன் ஆஃப்ரெர் 454.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
இதற்கு முன் நடைபெற்ற தகுதி சுற்றில், 24 வயதான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 597-40x புள்ளிகள் பெற்று, உலகச் சாதனையை சமன் செய்திருந்தார்.
இந்த சாதனை, இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்குத் தொடர்ச்சியான வெற்றியைத் தந்த முக்கியமான தருணமாகக் கருதப்படுகிறது.