நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரி மலைப்பகுதியில், வரும் நவம்பர் 22-ஆம் தேதி “மாடு மேய்க்கும் போராட்டம்” நடத்தப்படவுள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
மகேந்திரகிரி மலையில் விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி, அப்பகுதி மக்களுக்கு தங்களது பாரம்பரிய வன உரிமையை வலியுறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில், அப்பகுதியில் “வன உரிமை கிராம சபை அறிவிப்பு” பதாகையையும் சீமான் திறந்து வைப்பார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.