“SIR-ஐ தடுக்கிறதே இப்போதைய மிக முக்கியப் பொறுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்”
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் “எஸ்ஐஆர்” எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக, இன்று (நவம்பர் 11) திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது “எக்ஸ்” (X) பக்கத்தில், “SIR-ஐ தடுக்கிறதே நம்முன் உள்ள மிகப் பெரிய கடமை” எனக் குறிப்பிட்டு, இன்றைய போராட்டத்தைக் குறிக்கும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்:
“SIR-ஐத் தடுக்கிறதே நம்முன் உள்ள மிக முக்கியக் கடமை.
ஒருபுறம் மக்களாட்சியின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பறிக்கும் #SIR எனும் ஆபத்துக்கு எதிராக சட்டரீதியான போராட்டம் நடக்கிறது.
மறுபுறம், தொடங்கப்பட்டுள்ள #SIR பணிகளில் ஏற்படும் தவறுகளைத் தடுக்கும் வகையில் #WarRoom மற்றும் #Helpline அமைக்கப்பட்டுள்ளன.
களத்தில், இன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பி #SIR எனும் பேராபத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர்.
நாம் தொடர்ந்து செயற்படுவோம். மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்.”
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.