ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் காயம் – 4 மாத ஓய்வு
இந்தியா ‘ஏ’ அணியிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் அணியின் கேப்டனாகவும் விளையாடி வரும் ரஜத் பட்டிதார் காயம் அடைந்துள்ளார்.
மத்திய வரிசை பேட்ஸ்மேனான பட்டிதார், தற்போது ரஞ்சி டிராபி போட்டிகளில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கிடையில், இந்தியா ‘ஏ’ மற்றும் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
அந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடும் போது ரஜத் பட்டிதாருக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், அவருக்கு குணமடைய சுமார் நான்கு மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மீதமுள்ள ரஞ்சி போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், 2026 ஐபிஎல் தொடர் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்பதால், அதற்குள் அவர் முழுமையாக குணமடைந்து திரும்புவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.