நவம்பர் 13-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
தமிழக மாநில தேமுதிக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கட்சித் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நவம்பர் 13-ஆம் தேதி சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெறும். கூட்டத்தில் பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் அமைப்புசார் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.