“எங்கள் ஆட்சியில் பிஹாரில் வேலை வாய்ப்பு பெருகும்; யாரும் வெளியே போக வேண்டியதில்லை” — தேஜஸ்வி யாதவ்
பிஹார் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், எங்கள் ஆட்சியில் எந்த பிஹாரியும் வேலையிற்காக வேறு மாநிலத்துக்குச் செல்ல வேண்டியதில்லை என்று ஆர்ஜேடி தலைவர் மற்றும் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த 20 ஆண்டுகளில் பிஹார் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. நவம்பர் 14க்குப் பிறகு, பிஹாரின் வளர்ச்சி பயணம் தொடங்கும். உணவு பதப்படுத்தும் தொழில்கள், விவசாயம் சார்ந்த நிறுவனங்கள், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள், ஐடி மையங்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் போன்றவை பிஹாரில் உருவாகும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இந்த முறை பிஹார் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். வறுமை, வேலையின்மை, இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகளில் என்டிஏ அரசு எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் பிஹாரில் வேலை வாய்ப்புகள், கல்வி, வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆட்சியை கொண்டு வருவோம்.”
பிஹாரில் முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டத் தேர்தல் நாளை (நவம்பர் 11) நடைபெறுகிறது. முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்பட உள்ளன.