சூரியக் கட்சியில் ‘ஓவர் பாசம்’ சர்ச்சை — தலைமையில் குழப்பம்?
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ‘லீடர்’ பதவியில் அமர்த்தப்பட்ட சூரியக் கட்சி தலைவரைச் சுற்றி தற்போது பல புகார்கள் டெல்லி தலைமையிடம் குவிந்துள்ளன.
கட்சித் தலைமையிடம் அவரின் மீது ‘ஓவரான பாசம்’ காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும், சிலரின் மனக்கசப்பும் வெளிப்படத் தொடங்கியுள்ளது. அதோடு, கொலை வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என மத்திய போலீஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது என்ற வதந்தியும் பரவி வருகிறது.
இந்நிலையில், சில ஜூனியர் எம்பிக்கள், “நம்ம இல்லாம சூரியக் கட்சி பிரகாசிக்க முடியாது. கூட்டணியில் இருந்தாலும் முழுமையான வெற்றி சாத்தியமில்லை. அதனால், நம்மை எதிர்பார்த்து காத்திருக்கும் பனையூர் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கூடுதல் தொகுதிகளில் போட்டியிடலாம்,” என தங்கள் வட்டாரங்களில் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த அணியினர் அனைவரும் ‘லீடரை மாற்ற வேண்டும்’ என்பதையே தங்கள் ஒரே இலக்காக வைத்திருக்கின்றனர்.
ஒருவேளை அவர்களின் கோரிக்கையின்படி தலைமையில் மாற்றம் ஏற்பட்டால், டெல்லி தலைமையகம் சூரியக் கட்சியிலிருந்து விலகும் வாய்ப்பு இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.